தேசிய சாதனைகள் - 2016

தேசிய ரீதியில் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் விளையாட்டுப் போட்டி  நிகழவுகளில் எமது கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவன் செல்வன் புவிதரன் முதலாம் இடத்தைப் பெற்று சாவகச்சேரி இந்துக் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக தேசிய ரீதியல் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவி செல்வி ச.சங்கவி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளதோடு தட்டெறிதல் ,ஈட்டி எறிதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும்   இம் மாணவி வர்ணச் சான்றிதழ்களையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவி செல்வி கிரிஐா மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்  பதக்கத்தினைப் பெற்றுள்ளார். இம்மாணவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் கணாதீபனுக்கும் பொறுப்பாசிரியர் மதனரூபனுக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.

©Chavakachcheri Hindu College. All Rights Reserved. Designed By ICT Unit.

Main Menu