We have 3 guests online

பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் உதவிகளுக்கு நன்றிகள்.

எமது கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர்கள் தமது நாட்டில் தாமோதரகானம், இசை நிகழ்வுகள் போன்றவற்றை நடாத்தி எமது கல்லூரியின் அபிவிருத்திக்கு உதவி வருகின்றார்கள். விஞ்ஞான கூட அபிவிருத்திக்காக ரூபா 3 லட்சமும், பிரதான மண்டபத்தை விஸ்தரிப்பதற்கு ரூபா 5 லட்சமும் வழங்கியிருந்தார்கள். பிரதான மண்டபத்தின் விஸ்தரிப்பு பகுதிக்கு நிலம் செப்பனிட மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ரூபா செவாகியது. அதில் 2 லட்சம் ரூபா வழங்கியுள்ளார்கள். அவர்களது அயராத முயற்சிக்காக கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

க.பொ.த உயர்தர பரீட்சையின் முதன்மை பெறுபேறுகள் - 2014.

கணிதப் பிரிவு

த.செந்தாளன் - 3A, சி.அனுராஐ் - 2AB, பா.சத்தியகுகன் - 2AB, வீ.இராஐ்குமார் - 2AB, ந.கேகயன் - 2AB, ப.தர்ஷன் - A2B, ந.பிரதீபன் - 2AC, கு.கபிலன் - ABC, க.கோவர்த்தனன் - 3B, பீ.பிரமிஸா - 2BC, யெ.யெகதீஸன் - ABC.

உயிரியல் பிரிவு

பொ.காஸ்ரோ - A2B, பு.யென்சி - 2AC, ச.சஐித்தா - 2BC, ஞா.விதுசன் - 3B, உ.உமாசுதன் - 2BC, மா.சேனுஐா - 2BC.

வர்த்தகப் பிரிவு

வி.மதுசனா - 3A, சு.சுகென்யா - 3A, இ.டயாகரன் - 3A, சி.சுஐிவா - 2AB, இ.ஆராதனா - 2AB, து.திலீப்குமார் - 2AB, மோ.நிதர்ஷன் -2AB, ப.அனோஐா - 2AB, ப.கார்த்திகா - 2AB, தே.தாரணிகா - 2AB, தே.சுஐீவன் - A2B, க.சிவானுசன் - 2AC, க.வாகீசன் - 3B, மு.சிவமேகா - ABC, இ.வசந்ராம் - 2BC, பா.சரண்யா - B2C, க.தனுஷா - 3B, க..தனுஷ்கா - B2C.

கலைப் பிரிவு

செ.துசாந்தன் - 3A, த.தர்ஷிகா - 3A, சி.கிருஸ்ணா - 2AB, த.விமலினி - 2AB, சி.மதுஷன் - 2AB, பொ.தர்ஷிகா - 2AB, இ.நித்தியா - 2AB, த.புஷ்பவேணி - 2AC, இ.மதுரா - 2AC, த.தர்மிகன் - A2B, யோ.சங்கீர்த்தனன் - ABC, ம.குசானி - 3B, லி.நிருபனா - ABC, சி.டிலக்ஸனா - A2B, ச.ரஐித்தா - ABC, வே.தபோதினி - 2BC, கு.காயத்திரி - 2BC, யோ.அகிலரூபி - 3B, கு.கேதீஸ்வரி - 3B, ச.சமுத்திரா - 2BC, செ.தர்மிகா - 2BC, கு.வினோஐா - 2BC, சி.நிரோசினி - 2AC.
 

பரிசில் நாள்- 2014.

எமது கல்லூரியின் வருடாந்த பரிசில் நாள் நிகழ்வு சனிக்கிழமை (2014-11-08) காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.அ.கயிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் அருணாசலம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.சிறிசற்குணராசா (பீடாதிபதி, விஞ்ஞான பீடம், யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு சு.கிருஸ்ணகுமார் (வலயக் கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலகம், தென்மராட்சி) அவர்களும், பரிசில் வழங்குனராக திருமதி சிவராணி சிறிசற்குணராசா (தலைவர், மொழியியல், ஆங்கிலத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


 

தடம் வெளியீடு

எமது கல்லூரியின் செய்தி ஏடான "தடம்" 7 ஆவது வருடத்தின் இரண்டாவது வெளியீடு இன்று வெள்ளிக் கிழமை (07-11-2014) கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு அ.கயிலாயபிள்ளை தலமையில் இடம்பெற்றது. சஞ்சிகையின் முதற் பிரதியினை திரு இ.கயிலைநாதன் (ஒய்வு நிலை அதிபர், சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்கள் பெற்றுக் கொள்ள வெளியீட்டு உரையினை லயன் திரு வ.ஸ்ரீபிரகாஸ் (தலைவர், கைத்தொழில் வணிக மன்றம், சாவகச்சேரி) அவர்கள் நிகழ்த்தினார்.


தடம் - 20


 

சிறந்த நூலகம் - 2014.

தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி கல்விச் சேவைகள் அமைச்சினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மாதப் போட்டியில் எமது கல்லூரியின் நூலகம் சிறந்த நூலகமாக தெரிவுசெய்யப்பட்டது. இதற்கான விருது, கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் கல்விச் சேவை அமைச்சரினால் கல்லூரி அதிபர் திரு அ.கயிலாயபிள்ளை, நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி மீனலோசினி பாரதி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 5 of 18

Our Founder
Banner
Our Principal
Banner
User Login